மலேஷிய அரசியலில் என்ன நடக்கிறது?

கடந்த மாதம் ரொய்ட்டர் செய்திச் சேவையுடனான பேட்டியொன்றின்போது தான் பிரதமராக நியமனம் பெறப் பேகும் நாள் பற்றிய மனப் பதிவுகளை அன்வர் இப்ராஹீம் பகிர்ந்து கொண்டார். அதில் “மலேஷியாவை எனது கண்ணோக்கில் கட்டியெழுப்புவதற்கு கடந்த இருபது வருட காலமாக பொறுமை காத்திருந்தேன். மட்டுமன்றி, மலேஷியாவில் நீதியும் சகவாழ்வும் தழைத்தோங்குவதற்காக எனது கட்சி முன்னெடுத்த அயராத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் அந்த நாளை நான் நோக்குகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார் அன்வர். ஆனால், கடந்த இரண்டு வார காலமாக மலேஷிய அரசியலில் நடைபெறும் திடீர் திருப்பங்களும் மாற்றங்களும் அன்வர் இப்ராஹீமின் கனவையும் எதிர்பார்ப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளன. மட்டுமன்றி, ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சியின் பிரதம கொரடா டான் சிறீ முஹயத்தீன் யாஸீன் மன்னரால் மலேஷியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சர்வதேச சமூகத்தை மாத்திரமன்றி, மலேஷியர்களையும்கூட ஓரளவு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது உண்மையே.

கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பலம்வாய்ந்த அம்னோ கட்சியை தோல்வியடையச் செய்து மஹாதீர் முஹம்மத் மற்றும் அன்வர் இப்ராஹீம் தலைமையிலான பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் சீன சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி, அன்வர் இவ்ராஹீமின் மக்கள் நீதிக்கான கட்சி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மத் சபூ தலைமையிலான அமானா கட்சி மற்றும் மஹாதீர் முஹம்மத் தலைமையிலான ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி போன்ற கட்சிகள் அங்கம் வகித்தன. ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி கூட்டணியிலுள்ள மிகப் பெரும் இரு கட்சிகளான ஐக்கிய மலேஷிய பூர்விக் கட்சியின் தலைவரான மஹாதீர் முஹம்மத் முதலிரண்டு வருடங்களுக்கு பிரதமராகவும் அடுத்த இரண்டு வருடங்களுக்கான பிரதமராக மக்கள் நீதிக்கான கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹீமும் பதவியைப் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதன்படி, இந்த வருடம் மார்ச் மாதம் மஹாதீர் முஹம்மத் தனது பிரதமர் பதவியை அன்வர் இப்ராஹீமிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இந்தப் பின்னணியில்தான் அன்வர் இப்ராஹீம் தனக்கு பிரதமர் பதவி கிடைக்கும் நாள் பற்றிய மனக் கிடைக்கைகளை ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். பேரதிர்ச்சியூட்டும் வகையில், கடந்த இரண்டு வாரத்துக்குள் ஆளும் பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சியிலிருந்து மஹாதீர் முஹம்மதின் ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி வெளியேறியது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்பாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹாதீர் முஹம்மத் பதிவி விலக வேண்டியேற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நட்டின் அமைச்சரவையின் சட்டபூர்வத் தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இந்த திடீர் மாற்றங்களின் பின்புலத்தில் மீண்டும் இடைக்காலப் பிரதமராக மஹாதீர் முஹம்மத் நியமிக்கப்பட்டார். 

அதேநேரம், மலேஷிய சட்ட யாப்பின்படி, பராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை யார் பெற்றுக் கொள்கின்றாரோ அவரே பிரதமராக நியமிக்கப்படுவார். எனவே, அவசரமாக பாராளுமன்றத்தின் நம்பிக்கை யார் பக்கம் இருக்கிறது என்பதனை தீர்மானிக்கும்படி மன்னர் உத்தரவிட்டார். அதனடிப்படையில், பாராளுமன்றப் பெரும்பான்மை யார் பக்கம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பந்தயம் ஆரம்பமானது. இதற்கிடையில் இன்னோர் அரசியல் புரளியும் ஏற்பட்டது. அதுதான், மஹாதீர் முஹம்மத் தலைமையிலான ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி தனது பிரதமர் பதவிக்கான வேட்பாளராக மஹாதீர் முஹம்மதை நியமிக்காமல், அதன் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான முஹய்யதீன் யாஸீனை பிரேரித்ததாகும். அதேநேரம், மஹாதீர் முஹம்மதின் தலைமைப் பதவியையும் அக்கட்சியின் உயர் பீடம் இரத்துச் செய்தது. மறுபுறம், பகடான் ஹரபான் கூட்டணியில் ஏனைய சிறு கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மஹாதீர் முஹம்மதை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தியது அன்வர் இப்ராஹீம் தலைமையிலான மக்கள் நீதிக்கான கட்சி. இவ்வாறு ஒரே நாளில் ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சியின் வேட்பாளர் என்ற இடத்திலிருந்து பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சியின் வேட்பாளராக மாறினார் மஹாதீர் முஹம்மத். இதற்கூடாக ஏற்கனவே தேர்தலில் தோல்வியடைந்த அம்னோ கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவும் அதற்கெதிராக நிற்பதற்கு தற்போது மஹாதீரால் மட்டுமே முடியும் என்பதனாலும் தனது பிரதமராகும் எதிர்பார்ப்பை இரண்டாம் தடவையாகவும் விட்டுக் கொடுத்தார் அன்வர் இப்ராஹீம். ஆனால், கடைசியில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் முஹயத்தீன் யாஸீனுக்கு இருப்பதாகக் கருதி, மன்னர் ஷாஹ் அவரை பிரதமராக நியமித்தார். என்றாலும்கூட, பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சிகள் தங்களிடமே பெரும்பான்மை இருப்பதாகவும் பராளுமன்ற அமர்வொன்றை நடத்தினால், அதனை நிரூபிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் வாதித்துக் கொண்டிருக்கின்றன. மேலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தன்னையே ஆதரிப்பதாகக் கூறி முஹயத்தீன் யாஸீன் மன்னரை பிழையாக வழிநடத்தியதாக மஹாதீர் முஹம்மத் குற்றம் சாட்டுகிறார். இவையனைத்தையும் தொகுத்து நோக்கும்போது, மலேஷிய அரசியல் இழுபறி இன்னும் முடிவடையவில்லை என்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. 

அன்வர் ஏன் ஓரங்கட்டப்பட்டார்?

இதுதான் முக்கியமான கேள்வியாகும். அதேநேரம், தெளிவாக என்ன நடந்தது என்பதனை துல்லியமாக சொல்லுமளவுக்கு போதியளவு தகவல்களும் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அதாவது, பிரதமர் பதவியை அன்வர் இப்ராஹீம் அடைந்து விடக்கூடாது; அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சியின் சில முன்னணி உறுப்பினர்களது அரசியல் புரளிகள் அனைத்தும் இடம்பெற்றன என்பதாகும். முஹாதீர் முஹம்மத் தொடர்ந்தும் தனது பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக மறைமுகமாக காய் நகர்த்தி வருவதாக அன்வர் இப்ராஹீமுடைய மக்கள் நீதிக்கான கட்சி வட்டாரங்களில் ஆரம்பத்தில் பேசப்பட்டன. இந்தப் பின்புலத்தில், பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சியிலிருந்து அதன் பிரதான பங்காளிக் கட்சியான மஹாதீர் தலைமையிலான ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி உத்தியோகபூர்வமாக வெளியேறுவதனூடாக பகடான் ஹரபான் அரசாங்கம் பலவீனப்படும். மட்டுமன்றி, தொடர்ந்தும் பாராளுமன்றப் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ள முடியாது போகும். பின்பு, மஹாதீர் தனது தலைமையில் அரசாங்கமொன்றை புதிய உடன்படிக்கைகளுடன் அமைக்க முடியும். விளைவாக, புதிய அரசாங்கத்தின் புதிய ஏற்பாடுகளின் அடிப்படையில் பிரதமர் பதவியை அன்வருக்கு கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. காரணம், அன்வருக்கு பிரதமர் பதவியை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புபட்டது. அந்த அரசாங்கம் பதவியிறக்கப்பட்ட நிலையில் அன்வர் இரண்டாம் கட்டத்துக்கான பிரதமராக பதவியேற்றல் பற்றிய கதை முடிந்து விட்டது. இதுதான், மஹாதீரின் திட்டமாக இருந்தது என்று அன்வர் சார்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், அன்வர் இப்ராஹீமுடைய மக்கள் நீதிக்கான கட்சியின் பிரதித் தலைவர்களுள் ஒருவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அஸ்மின் அலி மற்றும் அவருடைய சகாக்களான ஏனைய 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அன்வர் இப்ராஹீமுக்குமிடையிலான உட்கட்சி மோதல்கள் கடந்த மூன்று மாத காலமாக உக்கிரமடைந்து வந்துள்ளன. இந்தப் பின்னணியில், மஹாதீர் முஹம்மதின் கட்சியில் அன்வர் பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று விரும்பிய பலமான முன்னணி அரசியல்வாதியும் தற்போதைய பிரதமருமான முஹயத்தீன் யாஸீன், அஸ்மின் அலியுடன் இணைந்து முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புரளியை கிளப்பி விடுவதற்கூடாக அன்வர் பிரதமராகும் கனவை தடுத்த நிறுத்த முடியும் என சிந்தித்தார். இந்த வியூகத்தின் முடிவாகவே பகடான் ஹரபான் அரசாங்கம் வீழ்ந்தது என்கிறது மற்றொரு தகவல். கடந்த இரண்டு வார காலமாக அன்வருக்கு எதிராக நடந்த சதியில் மஹாதீருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்கிறது இத்தகவல்.

மட்டுமன்றி, நடந்த அனைத்து விதமான அரசியல் புரளிகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டியது தற்போதைய பிரதமர் முஹயத்தீன் யாஸீனும் அன்வர் இப்ராஹீமுமாகும் என்கிறார் மஹாதீர். ஏனெனில், அன்வர் தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் நாளை குறிப்பிட்டுச் சொல்லுமாறு பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சிகளுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தார். குறிப்பாக, சீன இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி மற்றும் அன்வர் ஆதரவு அமானா கட்சி போன்றன தொடர்ந்தும் அன்வருக்கு சார்பாக உயர் மட்டக் கூட்டங்களில் வாதாடின. இந்த அழுத்தத்தை ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி உறுப்பினர்கள் சரி காணவில்லை. மட்டுமன்றி, அன்வருக்கு பிரதமர் பதவியைக் கொடுப்பதற்கு மஹாதீர் கட்சியின் பிரதம கொரடாவாக பதவி வகித்த முஹயத்தீன் யாஸீன் முழுமையாக விரும்பவில்லை. எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தற்போதைய பிரதமர் யாஸீனும் மற்றும் அவருடைய சகாக்களும் இணைந்து அன்வரை முழுமையாக ஓரம்கட்டுவதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கியதாக மஹாதீர் குறிப்பிடுகிறார். எனவே, நடைபெற்ற அரசியல் திருப்பங்களுக்கு யாஸீனும் தேவையற்ற விதத்தில் அழுத்தங்களைப் பிரயோகித்த அன்வரும் சம அளவில் பொறுப்புக் கூற வேண்டும் என்கிறார் அவர். அதேவேளை சந்தர்ப்பவசமாக, பழைய அம்னோ கட்சியின் உறுப்பினர்களும் அன்வருடன் உட்கட்சி மோதலில் ஈடுபட்ட அஸ்மின் அலி அணியும் மற்றும் பாஸ் இஸ்லாமியக் கட்சி உறுப்பினர்களும் முஹயத்தீன் யாஸீனீன் காய் நகர்த்தல்களுக்கு துணை நின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த இரண்டு வருடங்களாக அன்வருக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டவர்கள். இதுவே முஹயத்தீன் யாஸீனை பிரதமராக நியமிக்கும் அளவுக்கு பலம்வாய்ந்த இரகசியக் கூட்டணியாக அவர்களை மாற்றிவிட்டது. 

இவை தவிர, பிரதமர் பதவிக்கு அன்வர் பொருத்தமில்லை என்ற கருத்தை பல முறை சூட்சுமமாக மஹாதீர் கூறி வந்திருக்கிறார் என்பதனையும் மறந்து விட முடியாது. கடைசியாக அவர் கலந்து கொண்ட ஒரு கலந்துரையாடலில்கூட ‘முன்பு அன்வருக்கு இருந்த மக்களாதரவு தற்போது இல்லை’ என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதே போன்று, தான் விரும்பும் தினத்திலேயே அன்வருக்கு பதவியைக் கொடுப்பதாகவும் அவர் வலியுறுத்தி வந்துள்ளார். மஹாதீரின் இத்தகைய கருத்துக்கள் பகடான் ஹரபான் கூட்டணியில் அன்வர் ஆதரவுக் கட்சி உறுப்பினர்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தின. ஏனெனில், இந்த வருடம் (2020) மார்ச் மாதம் அன்வருக்கு பிரதமர் பதவியை கொடுப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்ட நிலையிலேயே, பகடான் ஹரபான் கூட்டணி தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றது. மட்டுமன்றி, அன்வர் பிரதமர் பதவியை அடைந்து விடக் கூடாது என்பதற்காக திரைமறைவில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருவதனையும் மஹாதீர் அறிந்து வைத்திருந்தார். அச்சதி முயற்சிகளை அவர் மக்கள் பொது மன்றத்தில் பேசுபொருளாக ஆக்கவில்லை. அது ஏன்? ஏன பலரும் கேள்வியெழுப்புகின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கும்போது அன்வருக்கு எதிராக நடைபெற்ற அரசியல் சதி முயற்சிக்கு மஹாதீரும் வகைகூற வேண்டும் அல்லது மஹாதீரின் மறைகரமும் தொழிற்பட்டிருக்கிறது என சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

புதிய அம்னோ பாஸ் உறவும் பகடான் ஹரபான் மீதான விமர்சனங்களும்

சமீபத்திய அரசியல் தள மாற்றங்களை அகன்ற கோணத்தில் வைத்து நோக்குகின்னர் வேறு சில அரசியல் பகுப்பாய்வாரள்கள். அதாவது, மஹாதீர் முஹம்மத் தலைமையிலான பகடான் ஹரபான் அரசாங்கம் மலே இனத்தவர்களுக்கான சிறப்புரிமைகள் விடயத்தில் போதியளவு கவனம் செலுத்தவில்லை என்ற தேசியவாதப் பிரசாரமொன்றை அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் கடந்த இரண்டு வருடங்களாகவே முன்னெடுத்துச் செல்கின்றன. குறிப்பாக, பகடான் ஹரபான் கூட்டணியில் சீன இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்பதே பாஸ்- அம்னோ கூட்டணியின் விமர்சனமாகும். எனவே, பகடான் ஹரபான் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது மலேஷியாவில் வாழும் மலே பெரும்பான்மைச் சமூகத்தின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம் என அக்கட்சிகள் அச்சமூட்டின. அத்தகைய பிரசாரங்களது நேரடி விளைவு யாதெனில், பல இடைத்தேர்த்ல்களில் அம்னோ- பாஸ் கூட்ணியிடம் தோல்வியடைய வேண்டிய நிலை பகடான் ஹரபான் கூட்டணிக்கு ஏற்பட்டது. மறுபுறம், பகடான் ஹரபானுக்கு எதிரான பலமான எதிர்த் தரப்பாக தேசியவாத சுலோகங்களுடன் கூடிய அம்னோ- பாஸ் கூட்டணி தளமாற்றமடைந்தது. எனவே, இத்தகைய தேசியவாத அலையை பகடான் ஹரபான் கூட்டணியால் எதிர்கொள்ள முடியாது என்பதே மஹாதீர் முஹம்மத் தலைமையிலான ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சியின் முன்னணி அரசியல்வாதிகளது கருத்தாகும். அதற்கான பிரதான காரணம் யாதெனில், பகடான் ஹரபான் கூட்டணியின் பலமான பங்காளிக் கட்சியாக சீன சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி இருக்கிறது என்பதாகும். இந்த முறுகல் நிலையை எதிர்கொள்வதற்காக பலரும் பகடான் ஹரபான் கூட்டணியைக் கலைத்து விட்டு, மலே தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என விவாதிக்க ஆரம்பித்தனர். இந்த விவாதம் பகடான் ஹரபான் கூட்டணி அரசாங்கத்தின் தொழிற்பாட்டு விளைதிறனை கடுமையாக பாதித்தன. உள்முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்தன. இத்தனைக்கும் மத்தியல், சீன இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி பலமாக ஆதரிக்கும் அதேவேளை, மலே தேசியவாத்தை எதிர்த்து நிற்கும் அன்வர் இப்ராஹீமின் மக்கள் நீதிக்கான கட்சியிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதென்பது மஹாதீர் வட்டாரத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு விடயமாகவே நோக்கப்பட்டது. ஆக மொத்தத்தில், மலே தேசியவாதம் குறித்த அதிகரித்த அச்சமே அதனை எதிர்த்து நிற்கும் அனவரை இறுதியில் ஓரங்கட்டுவதற்கான அரசியல் சூழமையை (political context)  தோற்றுவித்தது என்பது மற்றோர் அலசலாகும்.  

இறுதியாக, டான் சிறீ முஹயத்தீன் யாஸீன் பிரதமராக நியமிக்கப்பட்டபோதிலும்கூட, அவரின் நியமனம் எந்தளவு தூரம் ஜனநாயகத்தன்மை கொண்டது என்ற விவாதம் மலேஷியாவில் பொது மக்கள் மன்றத்தில் தொடர்ந்தும் நிலவுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு புகழ் பெற்ற அம்னோ உறுப்பினர்களுடனான முஹயத்தீன் யாஸீனுடைய திரைமறைவு உறவும் பல தரப்பினர்களால் விமர்சிக்கப்படுகிறது. மட்டுமன்றி, சகவாழ்வு, நீதி, அபிவிருத்தி போன்ற சுலோகங்களை முன்னிறுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பகடான் ஹரபான் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதித் திட்டத்தில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டும் டான் சிறீ முஹயத்தீன் யாஸீனை நோக்கி முன்வைக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் நாளில் பிரதம அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரப் போவதாக மக்கள் நீதிக்கான கட்சி தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கூறிக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி எவ்வாறு முஹயத்தீன் சுமுகமாக அரச இயந்திரத்தை இயக்கப் போகிறார் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும். 

இத்தனைக்கும் அப்பால், சந்தர்ப்பவாத அரசியலுக்கும், பயன்வழிவாத அரசியலுக்கும் (Pragmatic politics) பெயர் போனவர் டான் சிறீ முஹயத்தீன் யாஸீன். எனவே, தன்னை எதிர்க்கும் அன்வரையும் மாஹாதீரையும் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளும் முட்டாள்தனமான போக்கை அவர் பின்பற்றப் போவதில்லை என்பதும் திண்ணம். மாறாக, தனது சவால்களின் கனதியை நன்கறிந்த நிலையில் அதிகாரத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதே தற்போதைக்கு அவருடைய நகர்வாக இருக்கப் போகிறது. மறுபுறம், புதிய பிரதமர் பெயர்போன மலே தேசியவாதி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மலேஷிய இன ஒருமைப்பாட்டுக்கான மாநாட்டில் வைத்தே தன்னை ‘முதலாவது மலே இனத்தவன் மற்றும் இரண்டாவதுதான் மலேஷியன்’ என பகிரங்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டவர். இந்தப் பின்னணியில், அவருடைய அத்தகைய தேசியவாத உலக நோக்கு எவ்வாறு கொள்கை வடிவம் பெறப் போகிறது என்பதும் சர்வதேச கவன ஈர்ப்பைப் பெற்றுள்ள விடயமாக மாறி வருகிறது. ஆனாலும், அவர் அரசியல் பயன்வழிவாதத்தை நேசிப்பவர். எனவேதான், பிரதமராக பதவியேற்ற முதலாவது உரையிலேயே ‘தான் முழு மலேஷியாவுக்குமான பிரதமர் என்பதனை நன்கறிவேன். எனவே, மலே இனத்தவர்கள், சீனர்கள் மற்றும் தமிழர்கள் என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்லத் தயாராக இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டார். அதேபோன்று, சர்வதேச நிலைப்பாடுகளைக் கொண்ட ஒருவரல்ல முஹயத்தீன் யாஸீன். மலேஷியாவினுடைய வெளிநாட்டுக் கொள்கையில் எத்தகையதொரு பாதிப்பை புதிய பிரதமரின் மேற்சொன்ன இயல்பு ஏற்படுத்தப்போகிறது என்பதும் முக்கியமானது. ஆக மொத்தத்தில், மலேஷிய அரசியல் தொடர்ந்தும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்திக்கப் போகிறது என்பது மட்டும் வாஸ்தவமாகும்.

அஷ்ஷெய்க் ஸகி பவ்ஸ் (நளீமி), PhD (Reading- Malaysia)

அல்ஹஸனாத்- மார்ச் 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *