அல்ஹஸனாத் சமூகத்தின் அறிவு மட்டத்தை மேம்படுத்துகிறது

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி

பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா

அல்ஹஸனாத்தின் 50 வருட நிறைவையிட்டு சிறப்பிதழாக வெளிவந்த மார்ச் 2020 அல்ஹஸனாத் இதழுக்கு மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் வழங்கிய ஆசி.

அல்ஹஸனாத் கடந்த ஐந்து தசாப்த காலமாக தொடராக வெளிவருவது சாதாரண ஒரு விடயமல்ல. அது ஒரு மகத்தான சாதனை என்றால் மிகையாகாது. அல்ஹஸனாத்தின் ஆசிரியர் குழாமும் அதற்குப் பின்னால் பக்க பலமாக இருக்கும் இஸ்லாமிய நிறுவனமும் அதன் வாசகர்களும் என்றும் நினைவுகூரத்தக்கவர்கள்.

அல்ஹஸனாத்தின் வாசகர்களாக எல்லா மட்டத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்… என பல்துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, சாதாரண பெண்களும் அதன் வாசகர்களாக இருப்பது அல்ஹஸனாத்தின் தனித்தன்மை எனலாம்.

எனவே, சமூகத்திலுள்ள எல்லா மட்டங்களைச் சார்ந்தவர்களுடைய அறிவுத் தரத்தை மேம்படுத்துவதிலும் அவர்களுக்கு இஸ்லாமிய அறிவை, சிந்தனைத் தெளிவை வழங்குவதிலும் அல்ஹஸனாத் கணிசமான பங்காற்றி வருகிறது.

கடந்த ஐம்பது வருடங்களாக தொய்வின்றி தொடராக வெளிவரும் அல்ஹஸனாத் அண்மைக் காலமாக காலத்தின் தேவையறிந்து அதன் உள்ளடக்கங்களில் மாற்றங்களைச் செய்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

அல்ஹஸனாத் சவால்களை வெற்றி கொண்டு இன்னும் பல வருடங்கள் பயணிக்க வேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *