நீர் ரப்பானிய்ய மனிதரா? ரமழானிய்ய மனிதரா?

-அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்-

நாம் ரமழானுக்குரிய மனிதர்களா? அல்ல ரப்பானிய்ய மனிதர்களா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணமிது. நமது இபாதத்களும் ஏனைய நற்காரியங்களும் ரமழானோடு சுருங்கிவிடும் என்றிருந்தால் நாம் வெறுமனே பருவ கால மனிதர்கள், ரமழானுக்குரிய மனிதர்கள் மாத்திரமே@ ரப்பானிய மனிதர்களல்ல.

யார் ரமழானை வணங்கி வழிபட்டுக் கொண்டிருந்தாரோ இதோ எம்மை விட்டும் விடைபெற்றுச் செல்கிறது ரழமான். யார் ரமழானுடைய ரப்பை வணங்கி வழிபட்டுக் கொண்டிருந்தார்களோ அவன் நித்திய ஜீவன்@ என்றும் எப்போதும் நிலைத்திருப்பவன்.
ருமழானில் நாம் நிறைவேற்றிய வணக்க வழிபாடுகளையும் செய்த நற்காரியங்களையும் ரமழானுக்குப் பின்பும் தொடர்வோம் என்று இச்சந்தர்ப்பத்தில் நாம் உறுதிபூண வேண்டும். அப்போதுதான் நாம் ரப்பானிய்ய மனிதர்களாக இருப்போம். இல்லாதபோது நாம் வெறும் ரமழானிய மனிதர்களே!

ஒருவர் செய்த ஓர் அமல் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்பதற்கான ஓர் அடையாளம் அந்த அமலை தொடர்ந்தும் செய்வதற்கான பாக்கியம் அவருக்குக் கிட்டுவதாகும்.
ரமழானோடு ஏனைய காலங்களில் ஸ{ன்னத்தான நோன்பு நோற்பதும் தஹஜ்ஜுத் தொழுவதும் குர்ஆன் ஓதுவதும் ஏனைய நற்காரியங்களும் நின்றுவிடும் என்றிருந்தால் அவருடைய அமல்கள் எவ்வளவு தூரம் அல்லாஹ்வினால் கபூல் செய்யப்பட்டன என்பது கேள்விக்குறியாக இருக்கும்.

ரமழானுக்குப் பின்பும் ஷவ்வால் மாத 6 நோன்புகள், ஐயாமுல் பீழுடைய மாதாந்த நோன்புகள், துல்ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் நோன்புகள், அரபா நோன்புகள் உட்பட சுன்னத்தான நோன்புகளை நோற்பதற்கு நாம் உறுதிபூண வேண்டும். மேலும் அல்குர்ஆனுடனான தொடர்பை தொடர்ந்தும் கவனமாகப் பேணி வருவதற்கும் முடியுமான வரை தஹஜ்ஜுத் முதலான இரவு நேர வணக்கங்களையும் ஏனைய நற்காரியங்களையும் தொடர்வதற்கும்

இந்த சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூண வேண்டும்.
நாம் ரமழானில் பசித்திருந்து… விழித்திருந்து… தனித்திருந்து… நாவடக்கத்தோடு நாம் நடந்து கொண்டது போல தொடர்ந்தும் எமது உறுப்புக்களைப் பேணி ஏனைய எமது எல்லா செயற்பாடுகளையும் மிகக் கவனமாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த ரமழானில் நானும் நீங்களும் ரப்பானிய்ய மனிதர்களாகப் புடம்போட்டு உருவாக்கப்பட்டோம் என்று நம்ப முடியும். அப்போதுதான் உண்மையிலேயே ரப்பானிய்ய மனிதர்களாகவும் மாற முடியும்.

(அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக ‘வாரம் தோறும் ஒரு வாழ்க்கைப் பாடம்” எனும் தலைப்பில் தொடராக நிகழ்த்தி வரும் சிற்றுரையின் 30வது பகுதியின் சாராம்சமே இது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *