கொவிட் 19
ஏன் வந்தாய்
எதற்காக வந்தாய்
யாருக்காக வந்தாய்
யாரை அழிக்க வந்தாய்?
கொரோனாவே!
உன்னை உச்சரிக்க
உலகம் நடுங்குகிறது!
எப்படி வந்தாய்
எப்போது வந்தாய்
எங்கிருந்து வந்தாய்
என்னதான் செய்யப் போகிறாய்?
உன்னைக் கண்டு
உலகம் உறைந்துவிட்டது!
தவறாக வந்தாயா
இல்லை நீ
தவத்தால் வந்தாயா
யாரையும்
காவல் கொள்ள வந்தாயா?
உலகம்
உன் காலடியில்
உயிர்ப் பிச்சை கேட்கிறது!
எல்லைகளை மூடினாய்
இறையில்லங்களை மூடினாய்
உனது எல்லைகளைத்தான்
மூட முடியவில்லை!
அறிவியலும்
விஞ்ஞானமும்
-ஏயெம் தாஜ்-