குடும்பவியல் Archive

உள்ளதைக் கொண்டு திருப்தி காணுங்கள்

பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் ஒரே தரத்தில், சம அந்தஸ்தில், சரிசமமான வளங்களோடு படைக்கவில்லை.

அவர்களது தந்தை ஸாலிஹானவர்

பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் பெற்றோர் நம்பிக்கையிலும் கொள்கையிலும் நடத்தையிலும் சிறப்புற்று  விளங்குகின்றபோது அது அவர்களது சந்ததிகளில் நிச்சயமாக தாக்கம் செலுத்துகிறது. பேற்றோர் நன்னடத்தை மிக்கவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் திகழும்போதும் அவர்களுடைய பிள்ளைகளின் விவகாரங்களைப் பொறுப்பேற்பதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றன்றான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைப் பாடத்தை ஸூரதுல் கஃபின் இறுதிப் பகுதி நமக்குத் தெளிவுபடுத்துகிறது. மூஸா, கிழ்ர் (அலைஹிமஸ்ஸலாம்) அவர்களது பயணத்தின்போது நிகழ்ந்த மூன்றாவது காட்சி இதுவாகும்.  “பின்னர் அவ்விருவரும் சென்றனர். ஒரு கிராமத்தவர்களிடம் அவ்விருவரும் வந்து, அவர்களிடம் உணவளிக்க வேண்டியபோது அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர். அப்போது அங்கே விழுவதற்கு அண்மித்த நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டபோது அவர் அதை நிறுத்தி வைத்தார்.” (18: 77) இந்த வசனத்தில் அரபு மூலத்திலுள்ள “யுரீது அன்யன்கழ்ழ” என்ற பிரயோகம் அந்த சுவரை உயிர் வாழும் ஒரு ஜீவராசி போன்று சித்திரிக்கிறது. தூண் விழுந்து விட வேண்டும் என்று அந்தச் சுவர் யோசித்துக் கொண்டிருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது. அந்தச் சுவரை கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்)  நிமிர்த்தி வைத்தார்.