முஸ்லிம்களும் தொற்று நோயும்- அத்தாஊனுல் அஸ்வத்: ஒரு வரலாற்று நோக்கு

அப்துல் மலிக் அபூபக்கர் அல்லாஹுத் தஆலா மனிதர்களை இன்பங்களையும் துன்பங்களையும் கொண்டு சோதிப்பான் எனும் இஸ்லாத்தின் அடிப்படை வாழ்க்கை

தோல்வி என்பது பதற்றமா? பரவசமா?

டாக்டர் பாஜிலா ஆஸாத் Life Coach and Hypnotist ‘நான் எது செய்தாலும் தோல்வியாகவே முடிகிறது. அடுத்தடுத்த தோல்வி

இரவுகள் கூறும் இறை செய்தி!

மௌலவி எம்.எச்.எம். முனீர் அதிபர் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி புத்தளம் ‘நகரும் இரவின் மீது சத்தியமாக! அறிவுடையோருக்கு இனியும்

பல்லினவாத பின்னணியில் முஸ்லிம்களின் பங்காற்றுகை

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் – தென்கிழக்கு ஆசியாவில் மதச் சார்பான அல்லது மதச்சார்பற்ற என்ற கருத்து இன்று பெரிதும்

கருத்தியல்களின் தோற்றமும் அதில் சூழல்களின் தாக்கமும்

உருப்படியான தொழிலொன்று கிடைக்காத நிலையில் தொழில் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஒருவர் கூறுகிறார், ‘வாழ்க்கையே சூன்யமாகி விட்டது’ என்று…

சோதனை: ஓர் ஆன்மிக உளவியல் நோக்கு!

எஸ். ஆப்தீன், உளவளத்துணை உத்தியோகத்தர்,பிரதேச செயலகம், அக்கரைப்பற்று “அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அப்பால் சோதிக்க மாட்டான்.”

அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா?

கொரோனா தொற்றால் மரணம் அடைந்த ஒரு முஸ்லிமின் பிரேததத்தை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் தகனம் செய்ததை தொடர்ந்து எழுந்திருக்கும்

சான்று பகர்தலும் நற்பிரஜையாக வாழ்தலும்!

அஷ்ஷெய்க் எம்.எச்.எச்.எம். முனீர்விரிவுரையாளர் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி “அவ்வாறுதான் நீங்கள் மக்களுக்கு சான்று பகர்கின்றவர்களாகவும் தூதர் உங்களுக்கு சான்று பகர்பவராகவும் இருக்க உங்களை நாம் நடுநிலை சமூகமாக ஆக்கினோம்.” (ஸூரதுல் பகரா: 143) முஸ்லிம் சமூகத்தினது முதல் தலைமை கட்டமைப்பு, உள்ளக ஒழுங்குகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் முஹம்மத் (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமையில் வரையப்பட்டுக் கொண்டிருந்தபோது அல்லாஹ் அதன் மைய சுழற்சிகளையும் அதனுள் இழையோட வேண்டிய கோட்பாடுகளையும் நடத்தைசார் விடயங்களையும் வழங்கிக் கொண்டிருந்தான். உலக மக்களுக்கு வழிகாட்டி, மக்களை நேரிய வழியின்பால் வழிநடத்திச் செல்லும் மொத்தப் பொறுப்பு, முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது சமூகத்தின் மீதும் ஒப்படைக்கப்படுகிறது. தமது பிரதேசத்தில் (மக்கா, மதீனா) சமூக அநீதிகளுக்கு

அவர்களது தந்தை ஸாலிஹானவர்

பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் பெற்றோர் நம்பிக்கையிலும் கொள்கையிலும் நடத்தையிலும் சிறப்புற்று  விளங்குகின்றபோது அது அவர்களது சந்ததிகளில் நிச்சயமாக தாக்கம் செலுத்துகிறது. பேற்றோர் நன்னடத்தை மிக்கவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் திகழும்போதும் அவர்களுடைய பிள்ளைகளின் விவகாரங்களைப் பொறுப்பேற்பதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றன்றான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைப் பாடத்தை ஸூரதுல் கஃபின் இறுதிப் பகுதி நமக்குத் தெளிவுபடுத்துகிறது. மூஸா, கிழ்ர் (அலைஹிமஸ்ஸலாம்) அவர்களது பயணத்தின்போது நிகழ்ந்த மூன்றாவது காட்சி இதுவாகும்.  “பின்னர் அவ்விருவரும் சென்றனர். ஒரு கிராமத்தவர்களிடம் அவ்விருவரும் வந்து, அவர்களிடம் உணவளிக்க வேண்டியபோது அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர். அப்போது அங்கே விழுவதற்கு அண்மித்த நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டபோது அவர் அதை நிறுத்தி வைத்தார்.” (18: 77) இந்த வசனத்தில் அரபு மூலத்திலுள்ள “யுரீது அன்யன்கழ்ழ” என்ற பிரயோகம் அந்த சுவரை உயிர் வாழும் ஒரு ஜீவராசி போன்று சித்திரிக்கிறது. தூண் விழுந்து விட வேண்டும் என்று அந்தச் சுவர் யோசித்துக் கொண்டிருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது. அந்தச் சுவரை கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்)  நிமிர்த்தி வைத்தார். 

ஏன் சட்டத்தை மீறுகிறார்கள்?

மனிதர்களில் நான்கு வகையினர் இருக்கின்றனர். அவர்களுள் மிக உயர்ந்த வகையினரை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது: 1. சொல்வதை செவிமடுத்து (அதில்) மிக அழகானதை (தெரிவு செய்து) பின்பற்றுபவர்கள். (39: 18) ‘இவர்கள் நல்வழியை அடைந்தவர்கள்ளூ இவர்களே அறிவுடையவர்கள்’ என்றும் இத்தகைய மனிதர்களை அதே வசனத் தொடரில் குர்ஆன் பாராட்டுகின்றது. 2. இவர்கள்தான் மிக உயர்ந்தவர்கள் எனின், அடுத்த

கொரோனாத் தொற்று: எதிர்கொள்வதற்கு அவசியமான ஆன்மிக பலமும் பௌதிக பலமும்

கொரோனாத் தொற்று ஒரு மனிதப் பேரவலமாக மாறியிருக்கின்ற தருணத்தில் அதனை எதிர்கொள்ளாமலிருக்கவும் முடியாது… எதிர்கொண்டு தப்பவும் முடியாது… என்ற

இனம், மொழி, நிறம், தேசம், சமயம் என்பன மனித சமூகத்தின் பிரிகோடுகள் அல்ல!

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் உங்களிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவரே. நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” (ஸூரதுல் ஹுஜுராத்: 13) இங்கு அல்குர்ஆன் முழு மனித சமூகத்தை நோக்கியுள்ளது. தோல்விகளினதும் அழிவுகளினதும் துவக்கப் புள்ளி யாது? என்பதையும் சர்வ வெற்றியினதும் எழுச்சியினதும் ஆரம்பம் எங்கே இருந்து துவங்குகிறது? என்பதையும் இரத்தினச் சுருக்கமாக முன்வைக்கிறது. புவியோட்டில் வாழும் நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்கள். உங்களை ஆண்களாகவும் பெண்களாகவும் படைத்தவன் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினான் என்ற யதார்த்தம் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். மனிதர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை பல்வேறு குழுக்கள், சமுதாயங்கள், கோத்திர்ங்களின் வடிவில் அமைத்திருப்பதெல்லாம் பரஸ்பர அறிமுகத்திற்கும் ஒத்துழைப்புக்கும் அடிப்படையாக அமைய வேண்டும் என்பதற்காகவே. மனிதர்களில் சிலர் வெள்ளையர்களாகவும் இன்னும் ஒரு சாரார் கறுப்பர்களாகவும் படைக்கப்பட்டிருப்பதும் பல்வேறு மொழிகளை பேசுவதும் போட்டி போடுவதற்கும் பெருமை பேசுவதற்கும் பரஸ்பர இழிவுபடுத்துவதற்கும் தூற்றுவதற்கும் அல்ல. இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளை சார்ந்ததாகும் என அல்குர்ஆன் கூறுகின்றது.  “வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதும் உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே.” (அர்ரூம்: 22) குடும்பக் கட்டமைப்பு இரத்த உறவுகளிலிருந்து கிளைகள், கோத்திரங்கள் என விரிவாக்கம் பெற்றுள்ளது. எனவே அடிப்படையில் கொண்டாடப்படும் இரத்த பந்த பாசமும் நேசமும் வளர்ந்து வியாபகம் பெற்றிருக்க வேண்டும். அது பாதுகாக்கப்பட வேண்டும். அல்குர்ஆன் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது:  “மனிதர்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த எங்களின் இறைவனை அஞ்சுங்கள். மேலும் ஓர் ஆன்மாவிலிருந்து அதன் துணையை அவன் உருவாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவர்களிடம் (உரிமைகளை) கோருகின்றீர்களோ! அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.” (அந்நிஸா: 01)மனித உறவுகளை பரஸ்பர ஒத்துழைப்பை விருப்பமில்லாத சுமைகளாக கருதுவதும் உறவுகள் மீது வெறுப்புணர்வு கொள்வதும் அநாகரிகமானதாகும். மாறாக அவற்றை மாபெரும் அருட்கொடையாக கருத வேண்டடும்.  நிற, மொழி, வாழ்விட வேறுபாடுகளும் பாரம்பரியங்களும் தவிர்க்க முடியாத உண்மைகளாகும். அதன் வரலாறு மிக ஆழமானது; அகலமானது; விசாலமானது. அக்கட்டமைப்புக்களை உடைப்பதும் தகர்த்தெறிவதும் மானிடத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். பிரித்தாள்வதும் அவர்களுக்கு அநீதி இழைப்பதும் இறைவனின் கோபத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்களாகும். எந்த சமூகத்திடம் இந்த நோய்கள் காணப்படுகின்றனவோ அந்த சமூகம்  அழிந்தே போய்விடும். வரலாற்றின் ஒரு கட்டத்தில் இஸ்ரவேலர்களுக்கும் பிர்அவ்னுக்கும் இடையே நடந்ததை குர்ஆன் இப்படி முன்வைக்கிறது: “நிச்சயமாக பிர்அவ்ன் வரம்பு மீறி நடந்து கொண்டான். அதில் வசிப்பவர்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்தான். அவர்களில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தினான். அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றான். அவர்களின் பெண் மக்களை உயிரோடு விட்டு விட்டான். உண்மையில் அவன் அராஜகம் புரிவோரை சேர்ந்தவனாக இருந்தான். மேலும் எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும் அவர்களைத் தலைவர்களாக்கவும் அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம். மேலும் அவர்களின் மூலமாக பிர்அவ்னுக்கும் ஹாமானுக்கும் அவ்விருவரின் படையினருக்கும் அவர்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதை நாம் காண்பித்துக் கொடுக்கவும் நாடியிருந்தோம்.” (28: