முடங்கிக் கிடக்காமல் செயற்படுங்கள்!

ஒரு முஸ்லிமின் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். இறை நம்பிக்கைக்குப் பிறகு எப்போதும் ஒருவர் செயற்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்றே அல்குர்ஆன் அடிக்கடி வலியுறுத்துகிறது. ஒருவர் தனது ஆன்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் தன்னைச் சூழ இருப்பவர்களுக்கும் தான் வாழும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் சிறந்தவராக இருக்க விரும்பினால் அவரது செயற்பாடுகளும் அவை ஏற்படுத்தும் விளைவுகளும் முக்கியமானவை. சிறந்த தனி மனிதராகவும் நல்ல குடும்பத் தலைவராகவும் சமூக நலன்களுக்குப் பங்களிப்புச் செய்பவராகவும் நாட்டுக்குரிய நற்பிரஜையாகவும் வாழ விரும்பும் ஒருவர் தனது செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதும் திட்டமிடுவதும் முன்னுரிமைப்படுத்துவதும் மிக அவசியமானதாகும். செயற்படாமல் முடங்கிக் கிடப்பதை இஸ்லாம் வெறுக்கிறது. சோம்பல், இயலாமை, அலட்சியம், பலவீனம் முதலான மனித ஆளுமையை சிதைக்கின்ற எந்தவொரு பண்பும் நம்மிடம் இருக்கலாகாது. பலவீனமான ஒரு முஸ்லிமை விட பலமான ஒரு முஸ்லிமிடம் பல நன்மைகள் இருக்கின்றன.  “மேலும் அல்லாஹ் இரு மனிதர்களை உதாரணமாகக் கூறுகின்றான். அவர்களில் ஒருவன் எதனையும் செய்ய முடியாத ஊமை. அவன் தன் எஜமானில் தங்கி வாழ்பவன். அவர் அவனை எங்கு அனுப்பினாலும் நல்லதைக் கொண்டு வர மாட்டான். இவனும் மற்றும் நேரான வழியில் இருந்து கொண்டு நீதியைக் கொண்டு ஏவுகின்றவனும் சமமாவார்களா?” பார்க்க- (16: 75) மனிதர்களின் செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தன் தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் அவை எடுத்துக்காட்டப்படும் என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.  “நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருங்கள். உங்களது செயலை அல்லாஹ்வும் அவனது தூதரும் இறை நம்பிக்கையாளர்களும் அவதானிப்பர். மேலும் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நீங்கள் மீட்டப்படுவீர்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து உங்களுக்கு அவன் அறிவிப்பான் என்று நபியே! நீர் கூறுவீராக!” (9: 105) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் ‘ஒரு மனிதன் ஆற்றும் செயல் உம்மைக் கவர்ந்தால் ‘நீங்கள் செயற்படுங்கள். உங்களது செயலை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறை நம்பிக்கையாளர்களும் பார்ப்பார்கள் எனச் சொல்வீராக’ என்று கூறினார்கள். (அல்புகாரி) ‘அல்லாஹ் ஓர் அடியாருக்கு நன்மையை நாடினால் அவர் இறப்பதற்கு முன்னரே அவரைச் செயற்பட வைத்து விடுவான்’ என நபி

தமிழ் இதழியல் துறையில் ஒரு மைல்கல்… அசுர சாதனை…

அல்ஹஸனாத் 50 வருட காலமாக வெளிவருவது தமிழ் இதழியல் துறையில் ஒரு மைல்கல்… அசுர சாதனை… நேர்காணல்: ஹஸன்