அவர்களது தந்தை ஸாலிஹானவர்

பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ் பெற்றோர் நம்பிக்கையிலும் கொள்கையிலும் நடத்தையிலும் சிறப்புற்று  விளங்குகின்றபோது அது அவர்களது சந்ததிகளில் நிச்சயமாக தாக்கம் செலுத்துகிறது. பேற்றோர் நன்னடத்தை மிக்கவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் திகழும்போதும் அவர்களுடைய பிள்ளைகளின் விவகாரங்களைப் பொறுப்பேற்பதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றன்றான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைப் பாடத்தை ஸூரதுல் கஃபின் இறுதிப் பகுதி நமக்குத் தெளிவுபடுத்துகிறது. மூஸா, கிழ்ர் (அலைஹிமஸ்ஸலாம்) அவர்களது பயணத்தின்போது நிகழ்ந்த மூன்றாவது காட்சி இதுவாகும்.  “பின்னர் அவ்விருவரும் சென்றனர். ஒரு கிராமத்தவர்களிடம் அவ்விருவரும் வந்து, அவர்களிடம் உணவளிக்க வேண்டியபோது அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர். அப்போது அங்கே விழுவதற்கு அண்மித்த நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டபோது அவர் அதை நிறுத்தி வைத்தார்.” (18: 77) இந்த வசனத்தில் அரபு மூலத்திலுள்ள “யுரீது அன்யன்கழ்ழ” என்ற பிரயோகம் அந்த சுவரை உயிர் வாழும் ஒரு ஜீவராசி போன்று சித்திரிக்கிறது. தூண் விழுந்து விட வேண்டும் என்று அந்தச் சுவர் யோசித்துக் கொண்டிருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது. அந்தச் சுவரை கிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்)  நிமிர்த்தி வைத்தார். 

ஏன் சட்டத்தை மீறுகிறார்கள்?

மனிதர்களில் நான்கு வகையினர் இருக்கின்றனர். அவர்களுள் மிக உயர்ந்த வகையினரை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது: 1. சொல்வதை செவிமடுத்து (அதில்) மிக அழகானதை (தெரிவு செய்து) பின்பற்றுபவர்கள். (39: 18) ‘இவர்கள் நல்வழியை அடைந்தவர்கள்ளூ இவர்களே அறிவுடையவர்கள்’ என்றும் இத்தகைய மனிதர்களை அதே வசனத் தொடரில் குர்ஆன் பாராட்டுகின்றது. 2. இவர்கள்தான் மிக உயர்ந்தவர்கள் எனின், அடுத்த

கொரோனாத் தொற்று: எதிர்கொள்வதற்கு அவசியமான ஆன்மிக பலமும் பௌதிக பலமும்

கொரோனாத் தொற்று ஒரு மனிதப் பேரவலமாக மாறியிருக்கின்ற தருணத்தில் அதனை எதிர்கொள்ளாமலிருக்கவும் முடியாது… எதிர்கொண்டு தப்பவும் முடியாது… என்ற

இனம், மொழி, நிறம், தேசம், சமயம் என்பன மனித சமூகத்தின் பிரிகோடுகள் அல்ல!

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் உங்களிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவரே. நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” (ஸூரதுல் ஹுஜுராத்: 13) இங்கு அல்குர்ஆன் முழு மனித சமூகத்தை நோக்கியுள்ளது. தோல்விகளினதும் அழிவுகளினதும் துவக்கப் புள்ளி யாது? என்பதையும் சர்வ வெற்றியினதும் எழுச்சியினதும் ஆரம்பம் எங்கே இருந்து துவங்குகிறது? என்பதையும் இரத்தினச் சுருக்கமாக முன்வைக்கிறது. புவியோட்டில் வாழும் நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்கள். உங்களை ஆண்களாகவும் பெண்களாகவும் படைத்தவன் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினான் என்ற யதார்த்தம் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். மனிதர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை பல்வேறு குழுக்கள், சமுதாயங்கள், கோத்திர்ங்களின் வடிவில் அமைத்திருப்பதெல்லாம் பரஸ்பர அறிமுகத்திற்கும் ஒத்துழைப்புக்கும் அடிப்படையாக அமைய வேண்டும் என்பதற்காகவே. மனிதர்களில் சிலர் வெள்ளையர்களாகவும் இன்னும் ஒரு சாரார் கறுப்பர்களாகவும் படைக்கப்பட்டிருப்பதும் பல்வேறு மொழிகளை பேசுவதும் போட்டி போடுவதற்கும் பெருமை பேசுவதற்கும் பரஸ்பர இழிவுபடுத்துவதற்கும் தூற்றுவதற்கும் அல்ல. இவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளை சார்ந்ததாகும் என அல்குர்ஆன் கூறுகின்றது.  “வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதும் உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே.” (அர்ரூம்: 22) குடும்பக் கட்டமைப்பு இரத்த உறவுகளிலிருந்து கிளைகள், கோத்திரங்கள் என விரிவாக்கம் பெற்றுள்ளது. எனவே அடிப்படையில் கொண்டாடப்படும் இரத்த பந்த பாசமும் நேசமும் வளர்ந்து வியாபகம் பெற்றிருக்க வேண்டும். அது பாதுகாக்கப்பட வேண்டும். அல்குர்ஆன் இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது:  “மனிதர்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த எங்களின் இறைவனை அஞ்சுங்கள். மேலும் ஓர் ஆன்மாவிலிருந்து அதன் துணையை அவன் உருவாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவர்களிடம் (உரிமைகளை) கோருகின்றீர்களோ! அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.” (அந்நிஸா: 01)மனித உறவுகளை பரஸ்பர ஒத்துழைப்பை விருப்பமில்லாத சுமைகளாக கருதுவதும் உறவுகள் மீது வெறுப்புணர்வு கொள்வதும் அநாகரிகமானதாகும். மாறாக அவற்றை மாபெரும் அருட்கொடையாக கருத வேண்டடும்.  நிற, மொழி, வாழ்விட வேறுபாடுகளும் பாரம்பரியங்களும் தவிர்க்க முடியாத உண்மைகளாகும். அதன் வரலாறு மிக ஆழமானது; அகலமானது; விசாலமானது. அக்கட்டமைப்புக்களை உடைப்பதும் தகர்த்தெறிவதும் மானிடத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். பிரித்தாள்வதும் அவர்களுக்கு அநீதி இழைப்பதும் இறைவனின் கோபத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்களாகும். எந்த சமூகத்திடம் இந்த நோய்கள் காணப்படுகின்றனவோ அந்த சமூகம்  அழிந்தே போய்விடும். வரலாற்றின் ஒரு கட்டத்தில் இஸ்ரவேலர்களுக்கும் பிர்அவ்னுக்கும் இடையே நடந்ததை குர்ஆன் இப்படி முன்வைக்கிறது: “நிச்சயமாக பிர்அவ்ன் வரம்பு மீறி நடந்து கொண்டான். அதில் வசிப்பவர்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்தான். அவர்களில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தினான். அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றான். அவர்களின் பெண் மக்களை உயிரோடு விட்டு விட்டான். உண்மையில் அவன் அராஜகம் புரிவோரை சேர்ந்தவனாக இருந்தான். மேலும் எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும் அவர்களைத் தலைவர்களாக்கவும் அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம். மேலும் அவர்களின் மூலமாக பிர்அவ்னுக்கும் ஹாமானுக்கும் அவ்விருவரின் படையினருக்கும் அவர்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதை நாம் காண்பித்துக் கொடுக்கவும் நாடியிருந்தோம்.” (28:

கொரோனோ கற்றுத்தந்திருக்கும் வாழ்க்கைப் பாடம்

இயந்திரங்களைப் புரிந்துகொள்வது போல் மனிதர்களைப் புரிந்துகொள்ள வேண்டாம். கொரோனா வைரஸின் வருகையைத் தொடர்ந்து சீனாவில் விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளன என்றும்

கொரோனாவிற்கெதிரான யுத்தத்தின் போராளிகள்

கொரோனாவிற்கெதிரான யுத்தத்தை மூன்றாம் உலகப்போர் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. என்றாலும் ஒரு வைரஸுக்கும்

உறவின்றி அமையாது உலகு!

படைத்த இறைவனுடனான உறவுக்கு அடுத்ததாக எமது உறவானது, எம்மைப் பெற்றெடுத்த தாய்-தந்தை, எம்மோடு கூடப் பிறந்த சகோதர-சகோதரிகள், எமக்காகப் பிறந்த கணவன்-மனைவி, எமக்குப் பிறந்த பிள்ளைகள், எமது பிள்ளைகளுக்காகப் பிறந்த மருமகன்-மருமகள், எமது இரத்த பந்தங்கள், அயல் வீட்டார், ஊர் மக்கள், நாட்டு மக்கள்… என மனிதர்களுடனான உறவும் எம்மைச் சூழவுள்ள மண், நீர், காற்று, தாவரங்கள், மிருகங்கள், பறவைகள் என இயற்கைச் சூழலுடனான உறவும் சட்டம், பொதுச் சொத்துக்கள், பொது ஒழுங்குகள், அரசாங்கம்… என நாட்டுடனான உறவும் எமது உறவு என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றன.  மனிதர்களின் பல்வேறுபட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காகவே பல விதமான உறவுகள் உருவாகின்றன. உடல் சார்ந்த, உணர்வு சார்ந்த ஆன்மா சார்ந்த, சமூகம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, அரசு சார்ந்த என்று மனிதர்களது வாழ்வியல் தேவைகளுக்கேற்ப உறவுகளும் விரிகின்றன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட உறவு முறை தனக்குரிய பொறுப்புக்களை செய்யாதபோது பல உறவுகள் செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன.  வித்தியாசமான இயல்புகளையும் விருப்பு வெறுப்புக்களையும் உடைய பல்வேறு மனிதர்களோடும் சுற்றாடலின் பல்வேறு கூறுகளோடும் நாட்டின் வித்தியாசமான நிறுவனங்களோடும் சமகாலத்தில் உறவு முறைகளைப் பாதுகாத்து அதற்குரிய கடமைகளை நிறைவேற்றுவது சிரமமான, வெற்றிகரமான வாழ்க்கைக்கான தவிர்க்க முடியாத நிபந்தனையாகும்.  எமது கையிலிருப்பது ஒரேயொரு பந்துதான் என்றால் அதனை வீசிப் பிடித்து விளையாடுவது இலகுவானதாக இருக்கும். ஆனால், எமது கையில் பல பந்துக்கள் இருக்கின்றன. அவற்றை ஒரே நேரத்தில் வீசிப் பிடிக்க வேண்டும். என்றாலும், ஒன்றையும் தவற விட்டுவிடக் கூடாது என்றால் அது எவ்வளவு கஷ்டமோ அதே போல்தான் ஒரே காலத்தில் பல உறவுகளைக் கையாளுதல் என்ற சூழலும் அமையப் பெற்றிருக்கிறது. உறவுகளை சரியான முறையில் கையாளுதல் வேண்டும். அதில்தான் தனி மனிதர்கள் முதல் முழு உலகத்தினது பாதுகாப்பும் சுபிட்சமும் தங்கியிருக்கிறது.  உறவுகளின் முக்கியத்துவத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் இஸ்லாம் விளக்குகின்றது. இஸ்லாம் என்றாலே அது உறவுகளின் மொழிதான். இறைவன், மனிதன், பிரபஞ்சம் இவற்றுக்கிடையிலான உறவுகள், அவற்றின் வகிபாகங்கள், அதனைக் கையாளுவதற்கான வழிகாட்டல்கள், வரையறைகள் என்பவற்றின் தொகுப்பே இஸ்லாம் என்று கூற முடியும். மனிதர்களோடுள்ள உறவு: மனிதர்கள் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள். எனவே, அவர்கள் சகோதரர்கள் என்பது மனிதர்கள் குறித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.  “மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்.” (ஸூரதுந் நிஸா: 01) அவ்வாறே மனிதர்கள் கண்ணியமானவர்கள். தெரிவுச் சுதந்திரமுடையவர்கள். எனவே, மனிதர்களோடு நீதியாக நடக்க வேண்டும்; அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என பொதுவாக மனித உறவுகளைப் பற்றி கூறும் இஸ்லாம், மேலும் கொள்கைச் சகோதரர்கள், இரத்த உறவுகள், பெற்றோர்- பிள்ளை, அயல் வீட்டார் முதலானோருடனான உறவுகளையும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் எமக்கு தெளிவுபடுத்தியிருக்கிறது. இயற்கையோடுள்ள உறவு: இறைவன் இந்தப் பூமியை எமக்காகப் படைத்து நாம் வாழும் வகையில் அதனை சீராக்கி இருக்கின்றான். எனவே, அதனைப் பாதுகாக்க வேண்டும்; வளப்படுத்த வேண்டும் என இறைவன் எம்மைப் பணிக்கின்றான். “அவனே உங்களை பூமியிலிருந்து படைத்தான். ஆதனை வளப்படுத்துமாறு வேண்டிக் கொண்டான்.”  (ஸூரதுல் ஹூத்)

மலேஷிய அரசியலில் என்ன நடக்கிறது?

கடந்த மாதம் ரொய்ட்டர் செய்திச் சேவையுடனான பேட்டியொன்றின்போது தான் பிரதமராக நியமனம் பெறப் பேகும் நாள் பற்றிய மனப் பதிவுகளை அன்வர் இப்ராஹீம் பகிர்ந்து கொண்டார். அதில் “மலேஷியாவை எனது கண்ணோக்கில் கட்டியெழுப்புவதற்கு கடந்த இருபது வருட காலமாக பொறுமை காத்திருந்தேன். மட்டுமன்றி, மலேஷியாவில் நீதியும் சகவாழ்வும் தழைத்தோங்குவதற்காக எனது கட்சி முன்னெடுத்த அயராத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் அந்த நாளை நான் நோக்குகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார் அன்வர். ஆனால், கடந்த இரண்டு வார காலமாக மலேஷிய அரசியலில் நடைபெறும் திடீர் திருப்பங்களும் மாற்றங்களும் அன்வர் இப்ராஹீமின் கனவையும் எதிர்பார்ப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளன. மட்டுமன்றி, ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சியின் பிரதம கொரடா டான் சிறீ முஹயத்தீன் யாஸீன் மன்னரால் மலேஷியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சர்வதேச சமூகத்தை மாத்திரமன்றி, மலேஷியர்களையும்கூட ஓரளவு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது உண்மையே. கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பலம்வாய்ந்த அம்னோ கட்சியை தோல்வியடையச் செய்து மஹாதீர் முஹம்மத் மற்றும் அன்வர் இப்ராஹீம் தலைமையிலான பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் சீன சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி, அன்வர் இவ்ராஹீமின் மக்கள் நீதிக்கான கட்சி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மத் சபூ தலைமையிலான அமானா கட்சி மற்றும் மஹாதீர் முஹம்மத் தலைமையிலான ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி போன்ற கட்சிகள் அங்கம் வகித்தன. ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி கூட்டணியிலுள்ள மிகப் பெரும் இரு கட்சிகளான ஐக்கிய மலேஷிய பூர்விக் கட்சியின் தலைவரான மஹாதீர் முஹம்மத் முதலிரண்டு வருடங்களுக்கு பிரதமராகவும் அடுத்த இரண்டு வருடங்களுக்கான பிரதமராக மக்கள் நீதிக்கான கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹீமும் பதவியைப் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதன்படி, இந்த வருடம் மார்ச் மாதம் மஹாதீர் முஹம்மத் தனது பிரதமர் பதவியை அன்வர் இப்ராஹீமிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இந்தப் பின்னணியில்தான் அன்வர் இப்ராஹீம் தனக்கு பிரதமர் பதவி கிடைக்கும் நாள் பற்றிய மனக் கிடைக்கைகளை ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். பேரதிர்ச்சியூட்டும் வகையில், கடந்த இரண்டு வாரத்துக்குள் ஆளும் பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சியிலிருந்து மஹாதீர் முஹம்மதின் ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி வெளியேறியது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்பாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹாதீர் முஹம்மத் பதிவி விலக வேண்டியேற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நட்டின் அமைச்சரவையின் சட்டபூர்வத் தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இந்த திடீர் மாற்றங்களின் பின்புலத்தில் மீண்டும் இடைக்காலப் பிரதமராக மஹாதீர் முஹம்மத் நியமிக்கப்பட்டார்.  அதேநேரம், மலேஷிய சட்ட யாப்பின்படி, பராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை யார் பெற்றுக் கொள்கின்றாரோ அவரே பிரதமராக நியமிக்கப்படுவார். எனவே, அவசரமாக பாராளுமன்றத்தின் நம்பிக்கை யார் பக்கம் இருக்கிறது என்பதனை தீர்மானிக்கும்படி மன்னர் உத்தரவிட்டார். அதனடிப்படையில், பாராளுமன்றப் பெரும்பான்மை யார் பக்கம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பந்தயம் ஆரம்பமானது. இதற்கிடையில் இன்னோர் அரசியல் புரளியும் ஏற்பட்டது. அதுதான், மஹாதீர் முஹம்மத் தலைமையிலான ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி தனது பிரதமர் பதவிக்கான வேட்பாளராக மஹாதீர் முஹம்மதை நியமிக்காமல், அதன் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான முஹய்யதீன் யாஸீனை பிரேரித்ததாகும். அதேநேரம், மஹாதீர் முஹம்மதின் தலைமைப் பதவியையும் அக்கட்சியின் உயர் பீடம் இரத்துச் செய்தது. மறுபுறம், பகடான் ஹரபான் கூட்டணியில் ஏனைய சிறு கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மஹாதீர் முஹம்மதை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தியது அன்வர் இப்ராஹீம் தலைமையிலான மக்கள் நீதிக்கான கட்சி. இவ்வாறு ஒரே நாளில் ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சியின் வேட்பாளர் என்ற இடத்திலிருந்து பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சியின் வேட்பாளராக மாறினார் மஹாதீர் முஹம்மத். இதற்கூடாக ஏற்கனவே தேர்தலில் தோல்வியடைந்த அம்னோ கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவும் அதற்கெதிராக நிற்பதற்கு தற்போது மஹாதீரால் மட்டுமே முடியும் என்பதனாலும் தனது பிரதமராகும் எதிர்பார்ப்பை இரண்டாம் தடவையாகவும் விட்டுக் கொடுத்தார் அன்வர் இப்ராஹீம். ஆனால், கடைசியில் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் முஹயத்தீன் யாஸீனுக்கு இருப்பதாகக் கருதி, மன்னர் ஷாஹ் அவரை பிரதமராக நியமித்தார். என்றாலும்கூட, பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சிகள் தங்களிடமே பெரும்பான்மை இருப்பதாகவும் பராளுமன்ற அமர்வொன்றை நடத்தினால், அதனை நிரூபிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் வாதித்துக் கொண்டிருக்கின்றன. மேலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தன்னையே ஆதரிப்பதாகக் கூறி முஹயத்தீன் யாஸீன் மன்னரை பிழையாக வழிநடத்தியதாக மஹாதீர் முஹம்மத் குற்றம் சாட்டுகிறார். இவையனைத்தையும் தொகுத்து நோக்கும்போது, மலேஷிய அரசியல் இழுபறி இன்னும் முடிவடையவில்லை என்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.  அன்வர் ஏன் ஓரங்கட்டப்பட்டார்? இதுதான் முக்கியமான கேள்வியாகும். அதேநேரம், தெளிவாக என்ன நடந்தது என்பதனை துல்லியமாக சொல்லுமளவுக்கு போதியளவு தகவல்களும் இல்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அதாவது, பிரதமர் பதவியை அன்வர் இப்ராஹீம் அடைந்து விடக்கூடாது; அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சியின் சில முன்னணி உறுப்பினர்களது அரசியல் புரளிகள் அனைத்தும் இடம்பெற்றன என்பதாகும். முஹாதீர் முஹம்மத் தொடர்ந்தும் தனது பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக மறைமுகமாக காய் நகர்த்தி வருவதாக அன்வர் இப்ராஹீமுடைய மக்கள் நீதிக்கான கட்சி வட்டாரங்களில் ஆரம்பத்தில் பேசப்பட்டன. இந்தப் பின்புலத்தில், பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சியிலிருந்து அதன் பிரதான பங்காளிக் கட்சியான மஹாதீர் தலைமையிலான ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி உத்தியோகபூர்வமாக வெளியேறுவதனூடாக பகடான் ஹரபான் அரசாங்கம் பலவீனப்படும். மட்டுமன்றி, தொடர்ந்தும் பாராளுமன்றப் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ள முடியாது போகும். பின்பு, மஹாதீர் தனது தலைமையில் அரசாங்கமொன்றை புதிய உடன்படிக்கைகளுடன் அமைக்க முடியும். விளைவாக, புதிய அரசாங்கத்தின் புதிய ஏற்பாடுகளின் அடிப்படையில் பிரதமர் பதவியை அன்வருக்கு கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. காரணம், அன்வருக்கு பிரதமர் பதவியை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புபட்டது. அந்த அரசாங்கம் பதவியிறக்கப்பட்ட நிலையில் அன்வர் இரண்டாம் கட்டத்துக்கான பிரதமராக பதவியேற்றல் பற்றிய கதை முடிந்து விட்டது. இதுதான், மஹாதீரின் திட்டமாக இருந்தது என்று அன்வர் சார்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், அன்வர் இப்ராஹீமுடைய மக்கள் நீதிக்கான கட்சியின் பிரதித் தலைவர்களுள் ஒருவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அஸ்மின் அலி மற்றும் அவருடைய சகாக்களான ஏனைய 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அன்வர் இப்ராஹீமுக்குமிடையிலான உட்கட்சி மோதல்கள் கடந்த மூன்று மாத காலமாக உக்கிரமடைந்து வந்துள்ளன. இந்தப் பின்னணியில், மஹாதீர் முஹம்மதின் கட்சியில் அன்வர் பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று விரும்பிய பலமான முன்னணி அரசியல்வாதியும் தற்போதைய பிரதமருமான முஹயத்தீன் யாஸீன், அஸ்மின் அலியுடன் இணைந்து முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புரளியை கிளப்பி விடுவதற்கூடாக அன்வர் பிரதமராகும் கனவை தடுத்த நிறுத்த முடியும் என சிந்தித்தார். இந்த வியூகத்தின் முடிவாகவே பகடான் ஹரபான் அரசாங்கம் வீழ்ந்தது என்கிறது மற்றொரு தகவல். கடந்த இரண்டு வார காலமாக அன்வருக்கு எதிராக நடந்த சதியில் மஹாதீருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்கிறது இத்தகவல். மட்டுமன்றி, நடந்த அனைத்து விதமான அரசியல் புரளிகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டியது தற்போதைய பிரதமர் முஹயத்தீன் யாஸீனும் அன்வர் இப்ராஹீமுமாகும் என்கிறார் மஹாதீர். ஏனெனில், அன்வர் தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் நாளை குறிப்பிட்டுச் சொல்லுமாறு பகடான் ஹரபான் கூட்டணிக் கட்சிகளுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தார். குறிப்பாக, சீன இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி மற்றும் அன்வர் ஆதரவு அமானா கட்சி போன்றன தொடர்ந்தும் அன்வருக்கு சார்பாக உயர் மட்டக் கூட்டங்களில் வாதாடின. இந்த அழுத்தத்தை ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சி உறுப்பினர்கள் சரி காணவில்லை. மட்டுமன்றி, அன்வருக்கு பிரதமர் பதவியைக் கொடுப்பதற்கு மஹாதீர் கட்சியின் பிரதம கொரடாவாக பதவி வகித்த முஹயத்தீன் யாஸீன் முழுமையாக விரும்பவில்லை. எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தற்போதைய பிரதமர் யாஸீனும் மற்றும் அவருடைய சகாக்களும் இணைந்து அன்வரை முழுமையாக ஓரம்கட்டுவதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கியதாக மஹாதீர் குறிப்பிடுகிறார். எனவே, நடைபெற்ற அரசியல் திருப்பங்களுக்கு யாஸீனும் தேவையற்ற விதத்தில் அழுத்தங்களைப் பிரயோகித்த அன்வரும் சம அளவில் பொறுப்புக் கூற வேண்டும் என்கிறார் அவர். அதேவேளை சந்தர்ப்பவசமாக, பழைய அம்னோ கட்சியின் உறுப்பினர்களும் அன்வருடன் உட்கட்சி மோதலில் ஈடுபட்ட அஸ்மின் அலி அணியும் மற்றும் பாஸ் இஸ்லாமியக் கட்சி உறுப்பினர்களும் முஹயத்தீன் யாஸீனீன் காய் நகர்த்தல்களுக்கு துணை நின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த இரண்டு வருடங்களாக அன்வருக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டவர்கள். இதுவே முஹயத்தீன் யாஸீனை பிரதமராக நியமிக்கும் அளவுக்கு பலம்வாய்ந்த இரகசியக் கூட்டணியாக அவர்களை மாற்றிவிட்டது.  இவை தவிர, பிரதமர் பதவிக்கு அன்வர் பொருத்தமில்லை என்ற கருத்தை பல முறை சூட்சுமமாக மஹாதீர் கூறி வந்திருக்கிறார் என்பதனையும் மறந்து விட முடியாது. கடைசியாக அவர் கலந்து கொண்ட ஒரு கலந்துரையாடலில்கூட ‘முன்பு அன்வருக்கு இருந்த மக்களாதரவு தற்போது இல்லை’ என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதே போன்று, தான் விரும்பும் தினத்திலேயே அன்வருக்கு பதவியைக் கொடுப்பதாகவும் அவர் வலியுறுத்தி வந்துள்ளார். மஹாதீரின் இத்தகைய கருத்துக்கள் பகடான் ஹரபான் கூட்டணியில் அன்வர் ஆதரவுக் கட்சி உறுப்பினர்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தின. ஏனெனில், இந்த வருடம் (2020) மார்ச் மாதம் அன்வருக்கு பிரதமர் பதவியை கொடுப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்ட நிலையிலேயே, பகடான் ஹரபான் கூட்டணி தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றது. மட்டுமன்றி, அன்வர் பிரதமர் பதவியை அடைந்து விடக் கூடாது என்பதற்காக திரைமறைவில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருவதனையும் மஹாதீர் அறிந்து வைத்திருந்தார். அச்சதி முயற்சிகளை அவர் மக்கள் பொது மன்றத்தில் பேசுபொருளாக ஆக்கவில்லை. அது ஏன்? ஏன பலரும் கேள்வியெழுப்புகின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கும்போது அன்வருக்கு எதிராக நடைபெற்ற அரசியல் சதி முயற்சிக்கு மஹாதீரும் வகைகூற வேண்டும் அல்லது மஹாதீரின் மறைகரமும் தொழிற்பட்டிருக்கிறது என சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். புதிய அம்னோ பாஸ் உறவும் பகடான் ஹரபான் மீதான விமர்சனங்களும் சமீபத்திய அரசியல் தள மாற்றங்களை அகன்ற கோணத்தில் வைத்து நோக்குகின்னர் வேறு சில அரசியல் பகுப்பாய்வாரள்கள். அதாவது, மஹாதீர் முஹம்மத் தலைமையிலான பகடான் ஹரபான் அரசாங்கம் மலே இனத்தவர்களுக்கான சிறப்புரிமைகள் விடயத்தில் போதியளவு கவனம் செலுத்தவில்லை என்ற தேசியவாதப் பிரசாரமொன்றை அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் கடந்த இரண்டு வருடங்களாகவே முன்னெடுத்துச் செல்கின்றன. குறிப்பாக, பகடான் ஹரபான் கூட்டணியில் சீன இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்பதே பாஸ்- அம்னோ கூட்டணியின் விமர்சனமாகும். எனவே, பகடான் ஹரபான் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது மலேஷியாவில் வாழும் மலே பெரும்பான்மைச் சமூகத்தின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம் என அக்கட்சிகள் அச்சமூட்டின. அத்தகைய பிரசாரங்களது நேரடி விளைவு யாதெனில், பல இடைத்தேர்த்ல்களில் அம்னோ- பாஸ் கூட்ணியிடம் தோல்வியடைய வேண்டிய நிலை பகடான் ஹரபான் கூட்டணிக்கு ஏற்பட்டது. மறுபுறம், பகடான் ஹரபானுக்கு எதிரான பலமான எதிர்த் தரப்பாக தேசியவாத சுலோகங்களுடன் கூடிய அம்னோ- பாஸ் கூட்டணி தளமாற்றமடைந்தது. எனவே, இத்தகைய தேசியவாத அலையை பகடான் ஹரபான் கூட்டணியால் எதிர்கொள்ள முடியாது என்பதே மஹாதீர் முஹம்மத் தலைமையிலான ஐக்கிய மலேஷிய பூர்விகக் கட்சியின் முன்னணி அரசியல்வாதிகளது கருத்தாகும். அதற்கான பிரதான காரணம் யாதெனில், பகடான் ஹரபான் கூட்டணியின் பலமான பங்காளிக் கட்சியாக சீன சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி இருக்கிறது என்பதாகும். இந்த முறுகல் நிலையை எதிர்கொள்வதற்காக பலரும் பகடான் ஹரபான் கூட்டணியைக் கலைத்து விட்டு, மலே தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என விவாதிக்க ஆரம்பித்தனர். இந்த விவாதம் பகடான் ஹரபான் கூட்டணி அரசாங்கத்தின் தொழிற்பாட்டு விளைதிறனை கடுமையாக பாதித்தன. உள்முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்தன. இத்தனைக்கும் மத்தியல், சீன இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி பலமாக ஆதரிக்கும் அதேவேளை, மலே தேசியவாத்தை எதிர்த்து நிற்கும் அன்வர் இப்ராஹீமின் மக்கள் நீதிக்கான கட்சியிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதென்பது மஹாதீர் வட்டாரத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு விடயமாகவே நோக்கப்பட்டது. ஆக மொத்தத்தில், மலே தேசியவாதம் குறித்த அதிகரித்த அச்சமே அதனை எதிர்த்து நிற்கும் அனவரை இறுதியில் ஓரங்கட்டுவதற்கான அரசியல் சூழமையை (political context)  தோற்றுவித்தது என்பது மற்றோர் அலசலாகும்.   இறுதியாக, டான் சிறீ முஹயத்தீன் யாஸீன் பிரதமராக நியமிக்கப்பட்டபோதிலும்கூட, அவரின் நியமனம் எந்தளவு தூரம் ஜனநாயகத்தன்மை கொண்டது என்ற விவாதம் மலேஷியாவில் பொது மக்கள் மன்றத்தில் தொடர்ந்தும் நிலவுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு புகழ் பெற்ற அம்னோ உறுப்பினர்களுடனான முஹயத்தீன் யாஸீனுடைய திரைமறைவு உறவும் பல தரப்பினர்களால் விமர்சிக்கப்படுகிறது. மட்டுமன்றி, சகவாழ்வு, நீதி, அபிவிருத்தி போன்ற சுலோகங்களை முன்னிறுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பகடான் ஹரபான் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதித் திட்டத்தில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டும் டான் சிறீ முஹயத்தீன் யாஸீனை நோக்கி முன்வைக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் நாளில் பிரதம அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரப் போவதாக மக்கள் நீதிக்கான கட்சி தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கூறிக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி எவ்வாறு முஹயத்தீன் சுமுகமாக அரச இயந்திரத்தை இயக்கப் போகிறார் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.  இத்தனைக்கும் அப்பால், சந்தர்ப்பவாத அரசியலுக்கும், பயன்வழிவாத அரசியலுக்கும் (Pragmatic

கருத்தியல்களும் முஸ்லிம்களும்!

இஸ்லாம் ஒன்றாக இருந்தபோதிலும் இஸ்லாத்தின் பெயரால் காலத்திற்குக் காலம் தோன்றிய கருத்தியல்கள் வெவ்வேறு திசைகளில் முஸ்லிம்களை அழைத்துச் சென்றிருக்கின்றன என்பது ஒரு வரலாற்று உண்மை. இதுஇஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் சம்பந்தப்பட்டதொரு பிரச்சினை மாத்திரமல்ல, உலக சமூகங்கள் அனைத்திலும் இந்தப் பிரச்சினை இருந்தெ வந்திருக்கின்றது; இன்றும் இருக்கிறது. எனினும், நாம் இங்கு முஸ்லிம்களின் மத்தியில் காணப்படும் கருத்துக்களையே பேசுபொருளாக்கிக் கொள்கிறோம். கருத்தியல்கள் தானாக உருவாகுவதில்லை. முரண்பாடான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும்போது குறித்ததொரு சூழலில் மக்களை வழிநடத்த முனைபவர்கள் தமது முன்னுரிமைகளின் அடிப்படையில் மக்களை தங்களோடு வைத்துக் கொள்வதற்கும் அவர்களது ஆதரவுகளையும் உதவிகளையும் தம் பக்கம் ஈர்ப்பதற்கும் அவர்களை வழி நடத்தி வெற்றி பெறுவதற்குமானதோர் உந்துசக்தியாகவே கருத்தியல்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவ்வாறு பலரால் உருவாக்கப்பட்ட கருத்தியல்கள் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்துமிருக்கின்றன. மற்றொரு காலத்தில் முகவரியற்றுப் போயுமிருக்கிருக்கின்றன. எவ்வாறாயினும் கருத்தியல்கள் தொடர்பில் எமது கவனத்திற்குரிய அம்சம் இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்படும் ஒரு கருத்தியல் எந்தளவு தூரம் இஸ்லாத்தின் இயல்புக்கு நெருக்கமானதாக இருக்கிறது? அல்லது இஸ்லாத்தின் இயல்பிலிருந்து தூர விலகி நிற்கிறது என்பதே. இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட கருத்தியல்கள் குர்ஆனாலும் சுன்னாவாலும் மெருகூட்டப்பட்டிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. வரிக்கு வரி குர்ஆனும் சுன்னாவும் அத்தகைய கருத்தியல்களை அலங்கரித்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை தங்கியிருப்பது அவற்றில்ல. மாறாக, இஸ்லாத்தின் இயல்புக்கும் குறித்த கருத்தியல்களுக்கும் இடையில் காணப்படும் நெருக்கம் எத்தகையது என்பதிலேயே அது தங்கி இருக்கிறது. இதற்கான உதாரணம் ஒன்றை அல்குர்ஆன் எமக்குத் தந்து இருக்கிறது. நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பற்றியும் அன்னாரைப் பின்பற்றி நடந்த சமூகத்தைப் பற்றியும் குறிப்பிடுகின்றபோது அல்குர்ஆனின் 57: 27வது வசனம் அந்த உதாரணத்தைப் பிரஸ்தாபித்திருக்கின்றது. “…நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பின்பற்றியவர்களுடைய உள்ளங்களில் அன்பையும் கருணையையும் (நாம்) ஏற்படுத்தினோம். (உலக இன்பங்களை துறந்து விடக்கூடிய) துறவறத்தை நாம் அவர்கள் மீது கடமையாக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி அவர்களே அதனை புதிதாக உண்டு பண்ணிக் கொண்டார்கள். அவ்வாறு இருந்தும் அதனை அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்கவில்லை.” இஸ்லாம் மனித வாழ்க்கைக்கு அவசியமானதொரு பற்றற்ற தன்மையையை போதித்திருப்பது உண்மையே. பேராசைகள் மிகைத்து… அவற்றால் வரம்பு மீறல்கள் அதிகரித்து… குழப்பங்கள் நிறைந்ததொரு சூழல் உலகை ஆட்கொள்ளதிருப்பதற்கு உதவும் வகையிலும்… மறுமையின் இன்பங்களை மறக்கச் செய்யாதிருக்கும் வகையிலும் போதிக்கப்பட்டதே அந்தப் பற்றற்ற தன்மை. எனினும் பற்றற்ற தன்மையைப் போதிக்கும் வேத வரிகள் மற்றும் தூதர் மொழிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தங்களது விருப்பம் போல் அவற்றுக்கு விளக்கம் கொடுத்து மனித வாழ்க்கைக்கானதொரு கருத்தியலை உருவாக்கி விட்டார்கள் குறித்த சமூகத்தவர்கள் என்பதையே நாம் மேலே பார்த்த 57: 27ஆவது வசனம் எடுத்துக் கூறுகிறது. அதாவது வாழ்க்கைக்கு அவசியமாக இந்த பற்றற்ற தன்மையை… வாழ்க்கையைத் துறந்து விடுகின்ற பற்றற்ற தன்மையாக அவர்கள் மாற்றி விட்டார்கள். பற்றற்ற தன்மையை அல்லது துறவறத்  தன்மையை அனுசரிக்க வேண்டிய முறையில் அவர்கள் அனுசரித்திருந்தால் இந்தத் தவறை செய்திருக்க மாட்டார்கள் என்பதையே 57: 27 வசனம் குறிப்பிடுகின்றது. உண்மையில் பற்றற்ற தன்மை என்பது வாழ்க்கையின் மூன்று இடங்களில் இருக்க வேண்டியதாகும். மனித வாழ்க்கையை சீர்படுத்தக்கூடிய பற்றற்ற தன்மை அதுவே.

முடங்கிக் கிடக்காமல் செயற்படுங்கள்!

ஒரு முஸ்லிமின் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். இறை நம்பிக்கைக்குப் பிறகு எப்போதும் ஒருவர் செயற்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்றே அல்குர்ஆன் அடிக்கடி வலியுறுத்துகிறது. ஒருவர் தனது ஆன்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் தன்னைச் சூழ இருப்பவர்களுக்கும் தான் வாழும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் சிறந்தவராக இருக்க விரும்பினால் அவரது செயற்பாடுகளும் அவை ஏற்படுத்தும் விளைவுகளும் முக்கியமானவை. சிறந்த தனி மனிதராகவும் நல்ல குடும்பத் தலைவராகவும் சமூக நலன்களுக்குப் பங்களிப்புச் செய்பவராகவும் நாட்டுக்குரிய நற்பிரஜையாகவும் வாழ விரும்பும் ஒருவர் தனது செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதும் திட்டமிடுவதும் முன்னுரிமைப்படுத்துவதும் மிக அவசியமானதாகும். செயற்படாமல் முடங்கிக் கிடப்பதை இஸ்லாம் வெறுக்கிறது. சோம்பல், இயலாமை, அலட்சியம், பலவீனம் முதலான மனித ஆளுமையை சிதைக்கின்ற எந்தவொரு பண்பும் நம்மிடம் இருக்கலாகாது. பலவீனமான ஒரு முஸ்லிமை விட பலமான ஒரு முஸ்லிமிடம் பல நன்மைகள் இருக்கின்றன.  “மேலும் அல்லாஹ் இரு மனிதர்களை உதாரணமாகக் கூறுகின்றான். அவர்களில் ஒருவன் எதனையும் செய்ய முடியாத ஊமை. அவன் தன் எஜமானில் தங்கி வாழ்பவன். அவர் அவனை எங்கு அனுப்பினாலும் நல்லதைக் கொண்டு வர மாட்டான். இவனும் மற்றும் நேரான வழியில் இருந்து கொண்டு நீதியைக் கொண்டு ஏவுகின்றவனும் சமமாவார்களா?” பார்க்க- (16: 75) மனிதர்களின் செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தன் தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் அவை எடுத்துக்காட்டப்படும் என்றும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.  “நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருங்கள். உங்களது செயலை அல்லாஹ்வும் அவனது தூதரும் இறை நம்பிக்கையாளர்களும் அவதானிப்பர். மேலும் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நீங்கள் மீட்டப்படுவீர்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து உங்களுக்கு அவன் அறிவிப்பான் என்று நபியே! நீர் கூறுவீராக!” (9: 105) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் ‘ஒரு மனிதன் ஆற்றும் செயல் உம்மைக் கவர்ந்தால் ‘நீங்கள் செயற்படுங்கள். உங்களது செயலை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறை நம்பிக்கையாளர்களும் பார்ப்பார்கள் எனச் சொல்வீராக’ என்று கூறினார்கள். (அல்புகாரி) ‘அல்லாஹ் ஓர் அடியாருக்கு நன்மையை நாடினால் அவர் இறப்பதற்கு முன்னரே அவரைச் செயற்பட வைத்து விடுவான்’ என நபி

தமிழ் இதழியல் துறையில் ஒரு மைல்கல்… அசுர சாதனை…

அல்ஹஸனாத் 50 வருட காலமாக வெளிவருவது தமிழ் இதழியல் துறையில் ஒரு மைல்கல்… அசுர சாதனை… நேர்காணல்: ஹஸன்